நீண்ட காலமாக புனமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் ஆரம்ப வேலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த களவிஜயமாக நேற்றைய தினம் (22) பி.ப 1.00 மணியளவில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம் ஒன்றை மேற்க்கொண்டார்.
இதன்போது வன்னி மாவட்ட பாடாளுமன்ற உறுப்பினர எம்.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் திரு.யொய்ஸ் குறுஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.