சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடக நிறுவனங்களில் வெளிநாட்டு செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுடன் தொழில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக விசேட கலந்துரையாடல் அண்மையில் (20) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ரமிந்து பெரேரா "வெளிநாட்டு அரசியலில் ஊடகத்தின் பங்களிப்பு" எனும் தலைப்பில் அறிமுக உரையை வழங்கினார்.
இலங்கை சுற்றுலா கைத்தொழில் முன்னேற்றுதல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி எனபவற்றுக்காக வெளிநாட்டு ஊடகங்களை பயன்படுத்துதல் தொடர்பாக இங்கு மிகவும் அவதானம் செலுத்தப்பட்டதுடன் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களும் இங்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அவ்வாறு வெளிநாட்டு பொழுதுபோக்குத் தன்மையுடனான செய்திகளில் வரையறை இன்றி அரசியல், பொருளாதார, சமூக பகுப்பாய்வு போன்றவற்றை அறிக்கைகளாக முன்வைக்கும் சந்தர்ப்பங்கள் குறித்து அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார இங்கு தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுக்காக செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.