வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வு

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வு
  • :

திடீர் வெள்ள அனர்த்தம் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வினை மேற்கொண்டார்.

வெள்ள அனர்த்தம் காரணமாக சிலாப மாவட்ட மருத்துவமனை ரூ.1200 மில்லியனுக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளது.
இரண்டு முக்கிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், தற்போதுள்ள வளாகத்தை விட உயர் தரத்தில் மருத்துவமனை கட்டப்படும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இதன்போது அங்கு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (12) சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விஐயம் மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, வெளிநோயாளர் பிரிவு, மருத்துவமனை வளாகம், வார்டுகள், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ஹீமோடையாலிசிஸ் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம், இரத்த வங்கி, எக்ஸ்ரே சிகிச்சை பிரிவு, சி.டி ஸ்கான் சிகிச்சை பிரிவு, மருத்துவ குடியிருப்புகள், மற்றும் சுகாதார ஊழியர் குடியிருப்புகள் உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளையும் சுகாதார அமைச்சர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையின் எதிர்கால சேவைகளை படிப்படியாக செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் மற்றும் முக்கிய தேவைகள் குறித்து சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையின் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடலை மேற்கொண்டார்,
மருத்துவமனையின் வளர்ச்சிக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து சுமார் 650 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த பணத்தைப் பயன்படுத்தி மருத்துவமனையில் தற்போது கட்டுமானத்தில் உள்ள இரண்டு கட்டிட தொகுதிகளின் விரைவான அபிவிருத்தி குறித்து சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுமித் அத்தநாயக்க தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
மருத்துவமனை ஊழியர்கள் ஆற்றிய பங்கைப் பாராட்டிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
அனர்த்தம் காரணமாக சிலாபம் மாவட்ட மருத்துவமனை ரூ. 1200 மில்லியனுக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாகவும், வழக்கம் போல் மருத்துவமனையால் சேவைகளை செயல்படுத்த சுமார் ரூ. 1200 மில்லியன் செலவிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், மருத்துவமனையில் கட்டுமானத்தில் உள்ள மருத்துவ வார்டு கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், அவசர சிகிச்சை மற்றும் சிகிச்சை கட்டிட தொகுதி 02 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று வலுவாகக் அவர் கூறினார்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நன்கொடையாளர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் வழங்கும் உதவி மற்றும் மானியங்கள் மேற்கண்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் சிறந்த மருத்துவ உபகரணங்களை நிறுவுவது, இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டால், உபகரணங்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார், மேலும் எதிர்காலத்தில் மருத்துவமனையை இருந்ததை விட உயர் தரத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சிலாபம் நகர மையத்தில் 7 1/2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனை, புத்தளம் மாவட்டத்தின் முக்கிய அரசு மருத்துவமனையாகும்.
மத்திய அரசின் நேரடி மேற்பார்வையின் கீழ் உள்ள முக்கிய இந்த மருத்துவமனை மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் சுகாதார ஊழியர் கள் இங்கு பணிபுரிகிறார்கள்
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான் பெர்னாண்டோ, கயான் ஜனக, ஹருணி விஜேசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் சுமித் அத்தநாயக்க, உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ், மற்றும் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசின் உத்தியோகபூர்வ தகவல் செய்தித்தளம்
👉 Website ---> https://tamil.news.lk/news
👉 facebook ---> https://www.facebook.com/profile.php?id=61559593114097
👉 WhatsApp Group ----> https://chat.whatsapp.com/JZ7efW0aPc7JWlen3AiDns (தமிழ் செய்திகள்)
#Srilankan #Srilanka #lka #Lanka #Ceylon #DGI #Government #Information #Department #News #infodprtsl #development

Related Articles