வெற்றிடங்களை பார்த்து அவசியத்திற்கு ஏற்ப அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் இதற்கு எதிராக கருத்துக்களை வெளியிடவில்லை, அவர்களுக்கு அரச வருமானத்தை அதிகரிப்பது மற்றும் அரச செலவை முகாமைத்துவம் செய்தல் என்பவையே அவசியமானது என வலியுறுத்தினார்கள். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இணக்கப்பட்டுக்கு வந்ததன் பிரகாரம் அரச வருமானத்தை தலா தேசிய உற்பத்தியின் 15.1% வரை அதிகரிப்பதற்கும், சம்பந்தப்பட்ட முறையில் செலவை முகாமை செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன் அதனால் ஒரு பக்கத்தில் இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நல்ல பதில் கிடைத்ததாகவும் தெளிவுபடுத்தினார்.
கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட கலந்தரையாடல்களில் காணப்பட்ட அல்லது காணப்படாத விடயங்களை முன்வைத்து அவர்களின் அரசியல் இலாபங்களுக்காகவும் தற்போது அரசாங்கம் அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக சில முறைகளுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அது அரசியல் இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்டது போல் எவ்வித விமர்சனங்களும் இன்றி அரச சேவையை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் , அது நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியுடன் ஒவ்வொரு அமைச்சு நிறுவனங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு இந்த வருடத்தில் அனுமதி வழங்க முடியுமான அளவிற்கு அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் செயலாளரின் தலைமையில் செயற்படும் உபக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அமைச்சரவை அனுமதித்த சந்தர்ப்பங்கள் இரண்டு காணப்படுவதாகவும், முதலாவது சந்தர்ப்பத்தில் பத்து நிறுவனங்களுக்காக 7456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி அவ்வமைச்சு மற்றும் அதன் நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
அந்த நிறுவனங்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், சில நிறுவனங்களின் நேர்முகப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட அமைச்சரவை பேச்சாளர் அதன்படி, இந்த 7,456 ஆட்சேர்ப்புகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த மார்ச் 10ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேலும் 5,882 வெற்றிடங்களுக்காக அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து அதற்கான நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இதன்போது சுகாதார அமைச்சின் அனுமதிக்காக 2583 வெற்றிடங்களுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றதாகவும், அந்த வெற்றிடங்களின் அளவிற்கு இதற்கு உள்வாங்கப்படாத தாதிய சேவையில் 2218 தாதிகளை உள்வாங்குவதற்கு மாத்திரம் அனுமதி கிடைத்தது, எனினும் அந்தக் குழுவில் 3000க்கும் அதிகமான அளவில் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், 3147 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அவசியம் காணப்படுவதாகவும், அது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி சுகாதார அமைச்சு இனறி, தற்போது இரண்டாவது அமைச்சரவை கூட்டத்தில் 5882 வெற்றிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் விபரித்தார்.
அதன்படி மொத்தமாக 13,338 பேரை அரச சேவைக்கு ஆடசேர்ப்பு செய்வதற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளதாக இதற்கு கட்டாயமாக சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்த 2218 தாதி உத்தியோகத்தர்கள், 304 ஆயுர்வேத வைத்தியர்கள் என மொத்தமாக 2583 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கிணங்க 15,921 வெற்றிடங்களுக்கு அரச சேவையில் நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்து, அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இந்த பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட எந்த ஒரு அடிப்படைகளும் இன்றி மேற்கொள்ளப்படாது எனவும் வெற்றிடங்களை பார்த்து திறைசேரியில் காணப்படும் இயலுமான அளவுக்கு ஏற்ப அரச சேவையைப் பலப்படுத்துவதற்காக அத்தியாவசியமான வெற்றிடங்களை பூர்த்தி செய்து வருவதாகவும், சம்பள அதிகரிப்பை அவ்வாறே மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.