நீதி அமைச்சு மற்றும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் திருகோணமலை மாவட்டத்திற்கான விசேட காணி மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சிநெறி நேற்று (25) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த பயிற்சிநெறியானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. பு.பவானி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இப்பயிற்சிநெறியானது மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரை, ஆறு நாட்களைக் கொண்டதாக இப்பயிற்சிநெறி நடைபெறும்.
இதன்போது வளவாளர்களாக திருகோணமலை மாவட்ட செயலக மத்தியஸ்த பயிற்றுன அதிகாரி வீ.சவரிநாயகம், பதுளை மாவட்ட செயலக மத்தியஸ்த பயிற்றுன அதிகாரி எச்.எம்.சி.டி. ஹேரத், வவுனியா மாவட்ட செயலக மத்தியஸ்த பயிற்றுன அதிகாரி
விமலராஜ், மொனராகலை மாவட்ட செயலக மத்தியஸ்த பயிற்றுன அதிகாரி என்.வி.ஜி.எஸ்.டி.நாரங்கம்மன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
#Srilanka #lka #SL #News #newsdotlk


