எதிர்கால நகர உருவாக்கத் திட்டத்தின் (Virtual City Creation Project) முன்னோடித் திட்டமாக உலக வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை உட்பட கண்டி நகரை, Virtual City in Kandy எனும் பெயரில் உருவாக்குவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக கண்டி நகரை மையமாக வைத்து சுற்றுலாக் கவர்ச்சி மற்றும் சுற்றுலா அடையாளங்களுடடனான இடமாக முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 58 இடங்கள் மற்றும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகை வளாகம் மற்றும அதனை அண்மித்த மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் மிக்க 20 இடங்களை தொழில்நுட்பத்துடன் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உற்பத்தி நிறுவனங்களிடம் காணப்படும் உற்பத்தி நிறுவனத்தின் சாத்தியக்கூறு மற்றும் தொழில்நுட்பத் திறன் மற்றும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட முன் தயாரிப்பு பணிகளை மதிப்பீடு செய்த பின்னர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், இலங்கை டெலிகாம் தொடர்புடைய பணிகளுக்கு ஏற்றது என்று பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, Clean Sri Lanka திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி இலங்கை டெலிகாம் நிறுவனத்தால் Virtual City in Kandy திட்டத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


