வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி மற்றும் தொழிநுட்ப உதவியுடன், கிராமிய வீதிகளை நவீனமயமாக்கல் நடவடிக்கைகள்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி மற்றும் தொழிநுட்ப உதவியுடன், கிராமிய வீதிகளை நவீனமயமாக்கல் நடவடிக்கைகள்
  • :
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி மற்றும் தொழிநுட்ப உதவியுடன், கிராமிய வீதிகளை நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குனசேன

 ஒரு இலட்சத்து பத்தொன்பதாயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள இந்நாட்டு வீதிக் கட்டமைப்பை முறையான அபிவிருத்தியை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளதுடன், அதிகாரசபையின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் பிரதேச சபைப் பகுதிகளில் உள்ள கிராமப்புற வீதிகள் நவீனமயமாக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குனசேன தெரிவித்தார்.

'மறுமலர்ச்சிக்கான பாதை' கிராமப்புற வீதி அபிவிருத்தித் தேசிய திட்டத்தின் கீழ் 100 வீதிகளை நவீனமயமாக்கும் பணிகளைத் தொடங்குவதற்காக நேற்று (16) களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை தேர்தல் பிரிவில் உள்ள மொரப்பிட்டிய - அளுத்கம்கொட வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோது பிரதி அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

Related Articles