வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் அவர்கள் மே 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தர உள்ளார். மே 8 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
இன்று காலை சுமார் 11.05 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி, விசேட உரை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயர்மட்ட இராஜதந்திரப் பயணம், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே ஏற்கனவே உள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பல புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


