யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்கள் ஒளிரச் செய்து வெசாக் வலயம் மக்கள் பார்வைக்காக வெசாக் தினமான நேற்று (30.05.2026) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அதிதிகள் வெசாக் கூடுகள் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்ககளை ஒளிரச் செய்து வெசாக் வலய நிகழ்வுகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
இதனையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தன்சல்' நிகழ்வும் கலந்து கொண்டிருந்த அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாகவிகாரையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வுகளில் நாகவிகாரையின் விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ உள்ளிட்ட வணக்கத்துக்குரிய மதத் தலைவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சூயிரல் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுப்பிரமணியம் முரளிதரன் ,யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K பிரியந்த நவரத்ன, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக்க சிறிவர்தன, வட பிராந்தியக் கடற்படை கட்டளைத் தளபதி, பலாலி விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் வெசாக் அலங்காரப் போட்டிகளில் மிகச் சிறந்த வடிவமைப்புக்காக முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றிய இராணுவப் படைப்பிரிவுகளுக்கு கலந்து கொண்டிருந்த அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பல விதமான வெசாக் கூடுகள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.


