யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்றைய தினம் (25.03.2025) காலை 09.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான 08.03.2025 கலந்துரையாடலில் மார்ச் மாதம் ஒருங்கிணைப்புக்குழு கூட்டததை நடாத்துவதற்கான அனுமதி வழங்கப்படுள்ளதாகவும் அதில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள மட்டும் கலந்துரையாடல், உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமான விடயங்களை தவிர்த்தல், உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்தல் போன்ற விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதனைக் குறிப்பிட்டதுடன், ஒருங்கிணைந்த கிராமிய நிகழ்ச்சித் திட்டத்திடம் (2025- 2029), கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஆகியற்றுக்கான திட்ட முன்மொழிவுகள், பன்முகப்படுத்தப்பட்ட திட்ட முன்மொழிவுகள் ஏனைய திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாப்படவுள்ளதாகவும் தெரிவித்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயாப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், அரசாங்கத்தினால் முன்னனெடுக்கப்படும் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக இக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும்,மாகாண, மாவட்ட ரீதியான செயற்திட்டங்கள் தொடர்பாகவும் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தேவை எனவும் தெரிவித்துடன் அபிவிருத்தித் திட்டங்களைவிரைவாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளதாகவும், அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கெளரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (2025- 2029), கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம், மழை நீர் சேகரிப்புத்திட்டம், நீர் விநியோகத் திட்டம், நகர அபிவிருத்தித் திட்டம், கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் கெளரவ சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. இ. இளங்கோவன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.