யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்கின்ற அகதிகள் தமது நாட்டிற்கு திரும்பி நிலையாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்த கலந்துரையாடல்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்கின்ற அகதிகள் தமது நாட்டிற்கு திரும்பி நிலையாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்த கலந்துரையாடல்
  • :

உள்நாட்டில்  ஏற்பட்ட யுத்தம் காரணமாக நாட்டை விட்டு இடம்பெயர்ந்து  இந்தியாவில் வாழ்கின்ற அகதிகள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி நிலையாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான கலந்துரையாடல் (26) இலங்கை எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் (Oferr Ceylon) ஏற்பாட்டில்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜி.எம் ஹேமந்தகுமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில நடைபெற்றது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்புவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை  பிரச்சினைகளான, வசிப்பதற்கான காணி, அடிப்படை ஆவணங்கள், வாழ்வாதாரம், நாடு திரும்பிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு , நிரந்தர வீட்டுத்திட்டம்  , சுகாதார வசதிகள் ,  சமூக ஒருங்கிணைவு போன்றவை மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்குரிய தீர்வுகளை இக்கலந்துரையாடலின் மூலம்  பெற்றுக்கொடுப்பதே பிரதான  நோக்கமாக காணப்படுவதாக  Oferr Ceylon தலைவி செல்வி . சின்னதம்பி சூரியகுமாரி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]