அகில இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் (All Ceylon Cardioஇதயநோய் நிபுணர்கள் எதிர்கொள்ளும் பணியாளர் பற்றாக்குறை, சம்பள அளவு, பதவிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது

அகில இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் (All Ceylon Cardioஇதயநோய் நிபுணர்கள் எதிர்கொள்ளும் பணியாளர் பற்றாக்குறை, சம்பள அளவு, பதவிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது
  • :

அகில இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் (All Ceylon Cardiographers Union) சில தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில், இதயநோய் நிபுணர்கள் எதிர்கொள்ளும் பணியாளர் பற்றாக்குறை, சம்பள அளவு, பதவிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், முன்வைத்த தொழில்சார் பிரச்சினைகளுக்கு சாதகமான உடன்பாடுகள் எட்டப்பட்டன.  IMG-20260620-WA0016

சுகாதாரப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, பயிற்சிக் கல்லூரியை மேலும் மேம்படுத்தவும், இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான பயிற்சியாளர்களைப் பயிற்சிக்கு நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தகுதிகளின் அடிப்படையில் தற்போதைய சம்பளத்தை MT-4 இலிருந்து MT-6 ஆக உயர்த்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 

தொழில்சார் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 

 இந்த துறைக்கான பட்டப் படிப்பை ஆரம்பிப்பதற்கான தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டது. 

நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான வைத்தியசாலைகளின் இருதய சிகிச்சை பிரிவுகள் மற்றும் இருதய சத்திரசிகிச்சை பிரிவுகளில் 24 மணித்தியாலமும் தொடர்ச்சியான நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து சேவையை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

நாட்டின் ஒட்டுமொத்த இருதய நோயாளர் சிகிச்சைகளை உயர் மட்டத்தில் பேணுவதே சுகாதார அமைச்சின் முதன்மையான நோக்கமாகும் எனவும், சுட்டிக்காட்டியுள்ள நியாயமான தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதில் சுகாதார அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.   

தொழில்சார் உரிமைகளை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளின் நேர்மறையான பதிலை அகில இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கம் பாராட்டியது.  

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் சாமிக்க எச்.கமகே, பிரதி பணிப்பாளர் வைத்தியர் சம்பிக்க விக்கிரமசிங்க, யு.ஏ.எஸ்.எச். சிசிர குமார, பயிற்சிகளுக்கான பணிப்பாளர் கலாநிதி சமந்த பிரபாத் ரணசிங்க, அகில இலங்கை அகில இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். அனுராதா சாந்தகுமார, செயலாளர் ஏ.என்.சூரியராச்சி மற்றும் சங்கத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்

Related Articles