அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்
  • :

.கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் போது (19) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சேவை நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டது.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, முதன்மை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் பார்வையிடப்பட்டதோடு, வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள், எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள், எதிர்கால சவால்கள் மற்றும் தற்போதைய சவால்கள், மனித மற்றும் பௌதீக வளப் பிரச்சினைகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

நிர்வாகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட புதிய கிளினிக் தொகுதியின் தேவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வைத்தியசாலைகளில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை குறுகிய காலத்தில் முடிக்கும் திட்டம் குறித்தும், ஆரம்ப சுகாதார மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் அமைச்சர் ஊழியர்களைப் பணித்தார்.

 

இந்நிகழ்வில், கிராமப்புற அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ, கல்முனை தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வசீன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பி.எஸ்.எம். விமலரத்ன, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஐ.எம். ஜவானிஸ், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Related Articles