21-10-2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
01. இலங்கைக்கான தேசிய கட்டிடங்கள் குறியீட்டுக் கோவை (Building Codes) இனைத் தயாரித்தல்
கட்டிடங்கள் குறியீடு என்பது பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனோம்புகையை உறுதிப்படுத்துவது போலவே அனர்த்த ஆபத்துக்கள் குறைகின்ற வகையில் கட்டிடங்களைத் திட்டமிடல், நிர்மாணித்தல், பராமரித்தல் மற்றும் மாற்றுதல் தொடர்பாக குறைந்தபட்ச சட்டரீதியான மற்றும் தொழிநுட்ப ரீதியான தேவைகளுடன் கூடிய ஒழுங்குவிதிகளாகும். குறித்த குறியீட்டின் மூலம் கட்டிடங்களின் கட்டமைப்பு ரீதியான ஒருமைப்பாடு, தீயிலிருந்து பாதுகாத்தல், மின் கட்டமைப்பு, குழாய் நீர் கட்டமைப்பு, வலுசக்தி வினைத்திறன் மற்றும் இடர் பதில்வினையாற்றல் திறன் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் முழுமையாக கட்டுமானத் துறையும் உள்ளடக்கப்படுகின்றது. இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தேசிய கட்டிடங்கள் குறியீட்டுக் கோவையொன்று இன்மையால் கட்டுமானங்களில் கட்டமைப்பு ரீதியான பாதுகாப்பு, தரப்பண்பு மற்றும் ஒழுங்குறுத்துகை தொடர்பான பிரச்சினைகள் மேலெழுந்துள்ளன. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான தேசிய கட்டிடங்கள் குறியீட்டுக் கோவையை தயாரிப்பதற்கும் நிறுவுவதற்கும் 2019.04.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் குறியீட்டைத் தயாரிக்கும் படிமுறைகளில் ஏற்புடைய தரப்பினர்களை இணைப்புச் செய்து, தேசிய கட்டிடங்கள் குறியீட்டு எண்ணக்கருவை உருவாக்குவதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்புக்கள் உலக வங்கிக் குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலநிலை அரச முதலீட்டு முகாமைத்துவ மதிப்பீட்டின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள இறுதி நான்கு அம்சங்கள் அடங்கிய விதந்துரைகளுக்கிடையே காலநிலைப் பாதிப்புக்களுக்கு மீட்சித்திறனான தேசிய கட்டிடங்கள் குறியீட்டைத் தயாரித்தல் முன்னுரிமை நடவடிக்கையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால் இலங்கைக்கான தேசிய கட்டிடங்கள் குறியீட்டுக் கோவையை (Building Codes) தயாரிப்பதற்காக கருத்திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. இலங்கைக்கான உள்வாங்கலுடன் கூடிய ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்தி வேலைத்திட்டம்
இலங்கையில் மனவளர்ச்சி குறைபாடு (Autism) உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த சில தசாப்தங்களாக அதிகரித்துள்ளது. அதற்கமைய, மேலெழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக சுகாதாரம், கலவி மற்றும் சேவை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஐந்தாண்டு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்பப் படிமுறையாக சர்வதேச தரநியமங்களுக்கு இணங்க மனவளர்ச்சி குறைபாடு (Autism) உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளுக்கான சிகிச்சை நிலையமொன்றை கொழும்பு சீமாட்டி றிச்வே சிறுவர் மருத்துவமனையில் நிறுவுவதற்கு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்திற்கு மேலதிகமாக, 25 மாவட்டங்களிலும் குறித்த நோய்களுக்கான சிகிச்சைகளை விரிவாக்கம் செய்வதற்கான கருத்திட்ட முன்மொழிவு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மூலம் சமரப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டம் கீழ்வரும் 03 கூறுகளைக் கொண்டுள்ளது:
மாவட்ட மட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் சிகிச்சைகளுக்கான நிலையங்களை அமைத்தல்
மாகாண மட்டத்தில் சமுதாய தாய்சேய் நிலையத்தை நிறுவுதல்
மாவட்ட மட்டத்தில் இயலளவு விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்
அதற்கிணங்க, குறித்த கருத்திட்டத்தின் கூறுகளை 2025-2027 இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் அமுல்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், மனவளர்ச்சி குறைபாடு (Autism) உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள் தொடர்பான சிகிச்சைகளை விரிவாக்கம் செய்வதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. 2025-2029 ஆரம்பப் பிள்ளைப்பருவப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக தேசிய பல்துறை மூலோபாய செயற்பாட்டுத் திட்டத்தை' நடைமுறைப்படுத்தல்
அனைத்து இலங்கைப் பிள்ளைகளும் தமது உயரிய ஆற்றல்வளத்தை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் சூழலை உருவாக்குவதற்காக 'ஆரம்பப் பிள்ளைப்பருவப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கைளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தேசிய கொள்கை மூலோபாய செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அமுல்படுத்த வேண்டியுள்ளது. அதற்கிணங்க, அனைத்து பங்காள நிறுவனங்களின் பங்கேற்புடன் '2025-2029 ஆரம்பப் பிள்ளைப்பருவப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக தேசிய பல்துறை மூலோபாய செயற்பாட்டுத் திட்டம்' தயாரிக்கப்பட்டுள்ளது. இச் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களுக்கு உள்ளாகக் கூடிய மற்றும் தீமைபயக்கும் நிலைமைகளிலுள்ள பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தி சுகாதாரம், போசாக்கு, கல்வி, சமூக சேவைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, '2025-2029 ஆரம்பப் பிள்ளைப்பருவப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக தேசிய பல்துறை மூலோபாய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் கடமை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. இலங்கையர் தினம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துதல்
சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கட்டியெழுப்பும் நோக்கில் 'இலங்கையர் தினமாக' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார். இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையர் தினம்' நிகழ்ச்சித்திட்டத்தை 2025 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு மாநகர சபை மைதானத்திலும் மற்றும் விகாரமாதேவி பூங்கா உள்ளிட்ட அப்பிரதேத்தை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கியதாக 04 வலயங்களில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்கேற்புடன் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த நிகழ்ச்சித்திட்டம் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்ம வகையில், அனைத்து மாவட்டங்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உணவுக் கலாச்சாங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள், உள்நாட்டு கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை, கூடிய இலங்கையைக் புதிய உற்பத்திகளுக்கான வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 'இலங்கையர் தினம் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு பாடப்புத்தகங்கள்/பாட அலகுகளை அச்சிடல்
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக அச்சிடுவதற்குள்ள ஒட்டுமொத்த பாடப்புத்தகங்கள்/பாட அலகுகளின் பிரதிகளில் 40% வீதத்தை அச்சிடுவதற்காக நேரடி பெறுகை மூலம் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள்/பாட அலகுகளை அச்சிடுவதற்காக தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விலைமனுதாரர்களின் மதிப்பிடப்பட்ட குறைந்தபட்ச விலையின் அடிப்படையில், அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு அச்சிடுவதற்காக வழங்கப்படும் பாடப்புத்தகங்கள்/பாட அலகுகளுக்கான விலை தீர்மானிக்க வேண்டியுள்ளது. தேசிய போட்டி விலைமனு முறையின் மூலம் தெரிவு செய்யப்படும் விலைமனுதாரர் களுக்கு குறித்த பாடப்புத்தகங்கள்/பாட அலகுகளை அச்சிடுவதற்காக பெறுகை தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விலைகளின் அடிப்படையில், 78 வகையான பாடப்புத்தகங்கள்/பாட அலகுகளுக்கான 6.04 மில்லியன் மில்லியன் பிரதிகளை அச்சிடுவதற்கான ஒப்பந்தத்தை 761.29 மில்லியன் ரூபாய்களுக்கு (பெறுமதி சேர் வரியில்லாமல்) அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வவுச்சர்சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பரிசு வழங்கும் கைத்தொலைபேசி மென்பொருள் மூலம் ஸ்கான் செய்வதற்கு இயலுமாகும் வகையில் ஞசு குறியீட்டுடன் பாதுகாப்பாக அச்சிட்டு பயன்பெறுகின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கீழ்வரும் வகையில் மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடளாவிய ரீதியில் மாணவர்களின் எண்ணிக்கை 250 இளை விடவும் குறைவான பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 644,000 பேர் 251-500 இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட தோட்டப் பாடசாலை மாணவர்கள் 53,093 பேர் விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்ற 30 பாடசாலைகளில் மாணவர்கள் 2,300 பேர் பிரிவெனாக்களில் தெரிவு செய்யப்பட்ட துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் 30,000 பேர்
07. மண்சரிவு அனர்த்தத்திற்கு உள்ளாகக்கூடிய சகல வலயங்களையும் நிர்வாயித்தல் (சிவப்பு மற்றும் மஞ்சள் வலயங்களாக நிர்ணயிக்கும் முறைமையைப் பயன்படுத்தி)
நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 30% வீதமானவை மலைநாட்டுப் பிரதேசத்தில் மண்சரிவு ஆபத்துக்களுடன் கூடியதாக இருப்பதுடன், அது 14 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் பரந்து காணப்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு மண்சரிவு ஏற்படக்கூடிய மலைச்சரிவுகள் மற்றும் அவற்றின் பரம்பலை முற்கூட்டியே அடையாளங் காணும் ஆரம்ப முறையாக மண்சரிவு அபாய வலயங்களின் வரைபடம் தயாரிக்கப்பட்டு தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய, 2023 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய அதிகமான பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் மண்சரிவு அபாய வலயங்களுக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஆரம்பிக்கும் இயல்புகள் காணப்படுகின்ற வலயங்கள் மாத்திரம் அவ்வாறான வலயங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனாலும், மண்சரிவு அபாய முகாமைத்துவத்தின் போது மண்சரிவு ஆரம்ப வலயம், சிதைவுகள் சரிந்து விழுகின்ற வழிகள் மற்றும் சிதைவுகள் தரிக்கும் வலயம்உள்ளிட்ட மண்சரிவு மூலம் பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய முழுமையாள பிரதேசங்களையும் அடையாளங் காண்பது அவசியமாகும். இந்நிலைமையைக் கண்டறிந்து தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாயத்தால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஒட்டுமொத்த வலயம் (Total Impact Zone) நிரணயித்தல் (சிவப்பு மற்றும் மஞ்சள் வலய முறையைப் பயன்படுத்தி)' எனும் பெயரிலான கருத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்கான துரித தேவையைக் கருத்தில் கொண்டு குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீாரம் வழங்கியுள்ளது.
08. நிலைப்படுத்தப்பட்ட மண்சரிவு அபாயங் கொண்ட இடங்களை மீளமைத்தல் மற்றும் பராமரிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால் அடையாளங் காணப்பட்ட இடங்களில் மண்சரிவு அபாய நிலைமைகளைக் குறைப்பதற்காக மலைச்சரிவுகளை நிலைப்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 10 வருடங்களாக மண்சரிவு அபாயமுள்ள 250 இடங்கள் நிலைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்காக 10 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன. நிலைப்படுத்தப்பட்ட மண்சரிவுக்கு நிலத்தடி நீர் மற்றும் மேற்புற வழிந்தோடும் நீர் முகாமைத்துவத்திற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அமைவாகவே அதன் நீண்டகால உறுதிப்பாடு காணப்படும். சரியான பராமரிப்புக்களின்றி நிலத்தடி நீர் மற்றும் மேற்புற வழிந்தோடும் நீர் முகாமைத்துவம் செய்யப்படாமையால் நிலைப்படுத்தப்பட்ட இடமொன்றில் ஏற்படக்கூடிய உறுதிப்பாடற்ற நிலைமையைத் தடுப்பதற்காக சரியான வகையில் பராமரிப்புச் செய்யப்படல் வேண்டும். இதற்காக, குறித்த பங்காள நிறுவனங்களுக்கு தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால் வழிகாட்டல் கோவையொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், குறித்த நிறுவனங்களால் சரியான வகையில் பராமரிப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால் நிலைப்படுத்தப்பட்ட இடங்கள் மீண்டும் உறுதியற்ற நிலைமைக்குத் தள்ளப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இந்நிலைமையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தடுப்பதற்காக 'நிலைப்படுத்தப்பட்ட மண்சரிவு அபாயங் கொண்ட இடங்களை மீளமைத்தல் மற்றும் பராமரித்தல் எனும் பெயரில் தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த வேலைத்திட்டத்தை 2026-2030 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் குறிகட்டுவாள் இறங்குதுறையை நிர்மாணித்தல்
நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக ரீதியாக, சமய ரீதியாக மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது காணப்படுகின்ற இறங்குதுறை நீண்டகாலமாக சமுத்திர நிலைமைகளால் பாரியளவிலான புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது. போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங் கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான துணைக்கருவிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
2025 வரவு செலவுத்திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு மற்றும் இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான துணைக்கருவிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான வசதிகளை விரிவாக்கம் செய்வதற்கான முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, றாகம இரத்தவியல் புனர்வாழ்வு மருத்துவமனை மற்றும் இலங்கை தேசிய மருத்துவமனையில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. றாகம் இரத்தவியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவமனையில் இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான துணைக்கருவிகளை விநியோகிக்கும் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் இலங்கை தேசிய மருத்துவமனையில் திடீர் விபத்து மற்றும் என்பு சிகிச்சையியல் சேவைகளின் கீழ் இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான துணைக்கருவிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்தல் போன்ற கூறுகள் இக்கருத்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டம் 2025-2027 இடைநிலைக்கால் வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் 630.2 மில்லியன்கள் நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி அமுல்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அச்சு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விநியோகித்தல்
இலங்கை அரசின் அனைத்து இரகசிய மற்றும் ஏனைய அனைத்து அச்சுத் தேவைகளை தரப்பண்புடனும், திறந்த சந்தையில் போட்டித்தன்மையை எதிர்கொண்டு முழுமையான இரகசியத்தன்மையுடனும் பொறுப்புடனும் அரசாங்க அச்சகத் திணைக்களம் நிறைவேற்றி வருகின்றது. ஆனாலும், நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அச்சு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போதியளவு இன்மையால், இயந்திரங்கள் தொடர்ந்து பழுதடைதல், அதிக பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ள நேரிடல், அதிக உழைப்பைப் பயன்படுத்த நேரிடல் போன்ற சவால்களுக்கு அரசாங்க அச்சகத் திணைக்களம் முகங்கொடுத்து வருகின்றது. அதற்கமைய, நவீன தொழிநுட்பத்துடன் கூடிய அச்சு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்தல் மற்றும் குறித்த இயந்திரங்களைப் பயன்படுத்தி அச்சு நடவடிக்கைகளை அதிகரித்தல், பாதுகாப்பாக அச்சு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்கல், அரசுசாரா துறையினருடன் போட்டித்தன்மையான அச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்காக அபிவிருத்தி கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை 2026-2030 ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. மெரபளம் ஊசிமருந்து 1 கிராம் ஊசிமருந்துக் குப்பிகள் 1,900,000 இளை விநியோகிப்பதற்கான பெறுகை
பரந்தளவிலான தீவிர பற்றீரியா தொற்றுக்களுக்கான சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மெரபனம் ஊசிமருந்தைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 06 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய மெரபனம் ஊசிமருந்து 1 கிராம் ஊசிமருந்துக் குப்பிகள் 1,900,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகையை கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய United Biotech (Pvt) Ltd (Manufacturer: United Biotech (Pvt), India) இற்கு மொத்தச் செலவு மற்றும் சரக்குக் கட்டணம் உள்ளடங்கலாக 1.99 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அஅபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2025.07.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசின் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 1931 ஆம் ஆண்டிள் 01 ஆம் இலக்க அஞ்சல் அலுவலக பிணை நிதியக் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்து சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் புதிய சட்டத்தைத் தயாரித்தல்
அஞ்சல் அலுவலக பிணை நிதியக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளைச் சட்டத்தில்ஒருசில பிரிவுகளை முழுமையாகத் திருத்தம் செய்வதற்கும், புதிதாக சில பிரிவுகளை உட்சேர்ப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளமையால், அக்கட்டளைச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குப் பதிலாக சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆம் அத்தியாயமான) 1931 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அஞ்சல் அலுவலக பிணை நிதியக் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (282
15. நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடத வகைகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் (கடலில் அபாயகர ஔடத வகைகளை கடத்தலைத் தடுத்தல்) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
கடலில் இடம்பெறுகின்ற அபாயகர ஔடத வகைகளைப் போக்குவரத்துச் செய்தல் மற்றும் ஏனைய விளைவாய்ந்த திருத்தங்களை அறிமுகப்படுத்தி 1929 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடத வகைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கும், கடலில் யாதொருவரால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு குற்றப்பத்திரிகை மூலம் குற்றவியல் வழக்குத் தொடர்வதன் மூலம் விசாரணை செய்து தீர்ப்பளிப்பதற்கு, இலங்கையில் மேல் நீதிமன்றத்திற்கு சுயாதீன அதிகாரத்தை வழங்குவதற்காக 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தைத்திருத்தம் செய்வதற்காகவும் 2025.06.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலங்கள் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. நில அளவையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
இலங்கை நில அளவைத் திணைக்களத்தின்நில அளவையாளர் நாயகமாக கடமையாற்றிய வை.ஜீ. ஞானதிலக்க அவர்கள் 2025.10.01 அன்று தொடக்கம் அரச சேவையிலிருந்த ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, வெற்றிடமாகவுள்ள நில அளவையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை நில அளவை சேவையின் விசேட தர சிரேஷ்ட அதிகாரியான மேலதிக நில அளவையாளர் நாயகமான திரு. என்.கே.யூ.றோஹண அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. 2010 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சர்வதேச தொலைத் தொடர்புகள் இயக்குநர்கள் அறவீடு (விதித்தல்) சட்டத்தின் கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 22(1) ஆம் பிரிவுக்கமைய, அரச வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைகள் மூலம் சர்வதேச தொலைத் தொடர்புகள் இயக்குநர்கள் அறிவீட்டு விகிதத்தை நிர்ணயிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சருக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2023.01.01 ஆம் திகதிய 2312/80 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இறுதியாக திருத்தப்பட்ட, 2010.07.12 ஆம் திகதிய 1662/1ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சர்வதேச தொலைத் தொடர்புகள் இயக்குநர்கள் அறவீடு (விதித்தல்) சட்டத்தின் கட்டளைகள் 2430/14 மற்றும் 2025.04.01 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறித்த திருத்தப்பட்ட கட்டளைகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய திருமதி. ஜே.எம்.எஸ்.டீ.ரத்னாயக்க அவர்கள் 2025.09.21 தொடக்கம் சேவையிலிருந்த ஓய்வு பெற்றுள்ளமையால் குறித்த பதவி வெற்றிடமாகவுள்ளது. அப்பதவிக்குப் பொருத்தமான அதிகாரியொருவரைக் கண்டறிவதற்காக இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தர அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, நேர்முகத் தேர்வுக் குழுவின் விதந்துரைக்கமைய, இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தர சிரேஷ்ட அதிகாரியான திரு. கே.ரீ.ஐ. பிரேமரத்ன அவர்களை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. இணையவழிக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் கையொப்பமிடல்
இணையவழிக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNCC) 2024 டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 55 ஆவது பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அது மோசமான இணையவழிக் குற்றங்கள் பலவற்றுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள உலகளாவிய அணுகுமுறையாகும். குறித்த புதிய சமவாயத்துடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் இலங்கையில் இடம்பெறுகின்ற இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்காகவும் மற்றும் அவற்றுக்கு எதிராகப் போராடுதல், ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தல், சொத்துக்களை மீண்டும் கையகப்படுத்தல், சாட்சியாளர்கள் மற்றும் இன்னலுற்றவர்களைப் பாதுகாத்தல், தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் மற்றும் இயலளவை விருத்தி செய்தல் போன்ற பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காக இயலுமை கிட்டும். அதற்கமைய, இணையவழிக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் கையொப்பமிடுவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள், மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களும் ஒருங்கிணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. களனிவெளி (கொழும்பு கோட்டை தொடக்கம் அவிசாவளை வரைக்குமான) புகையிரதப்பாதையை இரத்தினபுரி வரைக்கும் நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கையை மேற்கொள்ளல் மற்றும் விரிவாள திட்டத்தைத் தயாரித்தல்
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் புகையிரதப் போக்குவரத்து நவீனமயப்படுத்தலின் கீழ் வினைத்திறனான புகையிரத சேவைகளை வழங்குதல் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக தற்போது இயங்கி வருகின்ற களனிவெளி புகையிரதப்பாதையை அவிசாவளையிலிருந்து மேலும் படிப்படியாக நீடிப்பதற்கு முன்மொழியப்பட்டு, அதற்குரிய அடிப்படை வேலைகளை ஆரம்பிப்பதற்கு 250 மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் காணப்பட்ட புகையிரதப் பாதைக்கு அண்டியதாகவே குறித்த புகையிரதப் பாதையை மீண்டும் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதற்காக சாத்தியவளக் கற்கையொன்றை மேற்கொள்ளல் மற்றும் விரிவான திட்டம் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்கு ஆலோசனை சேவை வழங்கும் நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்காக குறித்த பெறுகைச் செயன்முறையை அமுல்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள மொழியே மூலமாக அமையும்.


