அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அது ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாலை 05.00 மணிக்கு மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 850 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று ஒக்டோபர் 25ஆம் திகதி தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி ஒக்டோபர் 26ஆம் திகதியளவில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஒக்டோபர் 27ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாகவும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பா
கவும் காணப்படும்.


