கம்பஹா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவன வளாகங்களிலும் 1000 தென்னங்கன்றுகளை நடும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் அதிகபட்ச நில பயன்பாட்டை உறுதி செய்வதற்கும், எதிர்காலத் தேங்காய் நுகர்வை பூர்த்தி செய்வதற்கு பங்களிப்பு செய்வதற்கும், கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே விடுத்த கோரிக்கைக்கு இணங்க, தென்னை அபிவிருத்திச் சபை, முதல் கட்டத்தின் கீழ் 750 தென்னங்கன்றுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மாவட்டச் செயலக வளாகத்தில் 100 தென்னங்கன்றுகளும், மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் பிற அரச நிறுவன வளாகங்களில் உள்ள இடவசதிக்கு ஏற்ப மீதமுள்ள 650 தென்னங்கன்றுகளும் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்படும் அனைத்துக் கன்றுகளையும் பாதுகாத்துப் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் அனைத்துக் கன்றுகளையும் நடும் பணியை முடிக்க வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு