மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கான களஞ்சிய முகாமைத்தும் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் இன்று (10) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையின் கீழ் மாவட்ட செயலக மற்றும் 14 பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் களஞ்சிய முகாமைத்துவம் தொடர்பான அறிவாண்மையை மேம்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் எற்பாட்டில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கணக்காளர் எம். முகிலன் களஞ்சிய முகாமைத்துவம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியதுடன் உத்தியோகத்தர்களில் ஐய வினாக்களுக்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளையும் இதன் போது வழங்கினார்.
அலுவலக நடைமுறையில் முக்கியமான அம்சமாக கருதப்படும் களஞ்சிய முகாமைத்துவத்தை சிறந்த முறையில் மேற்கொள்வதனால் வினைத்திறனான சேவைகளை மக்களுக்கு வழங்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.