"தமக்கென்று இடம் - அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் கீழ், களுத்துறை மாவட்டத்தில் வீட்டு உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன
"தமக்கென்று இடம் - அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய திட்டத்திற்கு இணங்க, களுத்துறை மாவட்டத்தில் 117 குறைந்த வருமானம் கொண்ட பயனாளிகளின் குடும்பங்களுக்கு வீட்டு உதவிக்கான காசோலைகள் கையளிக்கும் நிகழ்வு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் களுத்துறை மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


