தொழில் முயற்சியாளர்களை இனங்காணுதல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்

தொழில் முயற்சியாளர்களை இனங்காணுதல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்
  • :

SLCBC 2nd Consecutive Regional Excellence Award நிகழ்வுக்கான நுண், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சியாளர்களை இனங்காணுதல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (06.03.2026) மு. ப. 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது . 

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், இக் கலந்துரையாடலானது மாவட்டத்தின் கைத்தொழில் துறைக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கும் ஒரு செயற்பாடாக அமைந்துள்ளதாகவும், 

Sri Lanka - Canada Businesses Council என்ற அமைப்பு கைத்தொழில் சார்ந்தவர்களை ஊக்கப்படுத்தும் அதே வேளை அவர்களை கௌரவப்படுத்தி பாராட்டி விருது வழங்கும் செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்திலே மேற்கொண்டுள்ளமை ஊக்குவிப்பாக அமைந்துள்ளதாகவும், தெரிவித்தார்

மேலும், இத்தகைய விருது வழங்கும் செயற்பாடானது விருது பெறுவதற்காக மட்டுமல்லாமல் அவர்களுடைய உற்பத்தியினுடைய தரத்தை மேம்படுத்துவதற்கான ஊக்கப்படுத்தல் செயற்பாடாக காணப்படுவதாகவும், 

ஒவ்வொரு உற்பத்தியாளரும் தமது உற்பத்தியின் தரத்தை உயர்ந்த நிலையினை அடைய வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், உண்மையில் இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் உற்பத்தியாளர்களை மேலும் அவர்களின் உற்பத்தியின் தரம் தொடர்பாக ஊக்கப்படுத்துவதே எனவும் பல்வேறுபட்ட உற்பத்தி திறன் சார்ந்த போட்டிகள் தொழில்துறை சார்ந்த போட்டிகளில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு உற்பத்தியாளர்கள் பல்வேறு உயர் நிலைகளை பெற்றுள்ளனர் எனவும், இதற்கு அடையாளமாக விருதுகள் காணப்படுவதாகவும் இது ஒவ்வொரு உத்தியோகத்தர்களினுடைய சேவையின் உடைய வெளியீடாக காணப்படுவதாகவும் தெரிவித்தார் 

மேலும், ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் உற்பத்தி துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் சேவையாற்றுவதோடு இவர்களுக்கு தொழிற்துறை சார்ந்தவர்களை மேலும் ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டிய பொறுப்பும் உள்ளது எனவும், 

இவ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலக ரீதியாக அனைத்து தொழில்துறை திணைக்களங்களும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 

திட்டமிடல் பணிப்பாளர்கள் உதவி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்களின் வழிநடத்தலின் ஊடாக இவ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

 

இவ் விருது வழங்கும் சந்தர்ப்பத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கியமைக்கு அரசாங்க அதிபரினால் நன்றி தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் Sri Lanka - Canada Businesses Council 

நிர்வாகப் பணிப்பாளர் திரு. இளங்கோ இரத்னசபாபதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ.சுரேந்திரநாதன், Sri Lanka - Canada Businesses council உறுப்பினர்கள் திருமதி கலா அமிர்தலிங்கம் மற்றும் திருமதி. கொன்சிகா சஞ்சீவ், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினுடைய தலைவர் பிரதேச செயலாளர்கள், உதவி மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலக தொழிற்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினுடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

#Srilanka #lka #SL #News #newsdotlk

Related Articles