கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான 17 ஆவது விளையாட்டுப் போட்டி நேற்று (ஜூன் 18) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கல்வியியல் கல்லூரிகளுக்கிடையிலான 17 ஆவது விளையாட்டுப் போட்டிகளின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் ஊவா தேசிய கல்விவியல் கல்லூரிக்கு உரித்தானதோடு, ஹாபிட்டிகம வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் டபிள்யூ. ஏ. எஸ். அனுத்தரா திறமையான விளையாட்டு வீராங்கனையாகவும், எஸ். ஜதுர்ஷன் திறமையான விளையாட்டு வீரராகவும் அமைச்சரிடமிருந்து விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்வி அமைச்சின் அதிகாரிகள், கல்வியில் கல்லூரிகளின் அதிபர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்றனர்.


