"இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு" எனும் தொனிப்பொருளிலான கிளீன் ஸ்ரீலங்கா ( clean srilanka ) வேலைத்திட்டத்தின் கீழ், வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பான பயணம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு
"இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு" எனும் தொனிப்பொருளிலான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பான பயணம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வானது (19.08.2025) யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் அதிபர் தயாளினி ஏப்ரகாம் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண கல்வியமைச்சு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இணைந்து இந்த செயலமர்வை நடாத்தியிருந்தனர்.
இதன்போது, பாதுகாப்பான வீதிப் பாதுகாப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு போக்குவரத்து பொலிஸ் தலைமையகத்தின் நாடகப் பிரிவினரால், பாதுகாப்பான போக்குவரத்து தொடர்பாக, விழிப்புணர்வு வீதி நாடகம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
இவ் விழிப்புணர்வுச் செயலமர்வில் 600 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


