Clean Srilanka வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்படும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு கொடுப்பனவாக 09 இலட்சம் ரூபாய் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொடுப்பனவும் இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த விடயம் குறித்து நேற்று (09) பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து முற்றிலும் பொய்யனது. இணையத்தள உருவாக்கத்திற்கோ அல்லது பாடலை உருவாக்கிய களைஞருக்கோ வழங்கப்பட்டதாக கூறப்படும் கொடுப்பனவு முற்றிலும் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இத் திட்டத்திற்கு 09 இலட்சத்தை விட அதிகம் செலவிடப்படவும் இல்லை செலவிடப்படவும் மாட்டாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.