பொலிஸ்மா அதிபரை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு 

பொலிஸ்மா அதிபரை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு 
  • :

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் கௌரவ பாராளுமன்ற சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் இன்று (25) கையளிக்கப்பட்டது. இதில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 

2002ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 5வது பிரிவுக்கு அமைய இந்தத் தீர்மானம் கௌரவ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், கௌரவ பிரதியமைச்சர்களுமான மஹிந்த ஜயசிங்க, எரங்க குணசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன மற்றும் (சட்டத்தரணி) உபுல் அபேவிக்ரம ஆகியோர் இந்தப் பிரேரணையை கௌரவ சபாநாயகரிடம் கையளித்தனர்.

எம். ஜயலத் பெரேரா, 

பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்),

இலங்கை பாராளுமன்றம்.

 

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]