யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கு விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கு எந்தத் தொடர்பும் அல்லது தலையீடும் இல்லை என்றும், அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சிறப்புரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபைத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பான சம்பவம் குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சபைத் தலைவர் இதன்போது தெரிவித்தார்.