விவசாயிகளுக்கு உர மானியமாக 25000 ரூபா மற்றும் நெற் செய்கைக்கென இலவச பொட்டாசியம் உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் 

விவசாயிகளுக்கு உர மானியமாக 25000 ரூபா மற்றும் நெற் செய்கைக்கென இலவச பொட்டாசியம் உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் 
  • :

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கென உர மானியத்தை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஜனவரி 8ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

ஒவ்வொரு மாவட்டத்திற்குமென உர மானியத்தை வழங்குவதற்கான கால எல்லை 2024 ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 2025 பெப்ரவரி முதலாம் திகதி வரையாகும். இதற்கென 25000 ரூபா உர மானியம், 15000 ரூபா மற்றும் 10000 ரூபா என்ற தவணை அடிப்படையில் இரு கட்டங்களாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 15000 ரூபா முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சாதகமான மற்றும் உரிய செயன்முறையை முன்னெடுப்பதற்கு எமது அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கென விவசாய அமைப்புகளிடமிருந்து கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையும் இடம்பெறுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

வயல் காணிகளில் நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கென வழங்கப்படும் நிதி நிவாரணத்திற்கு மேலதிகமாக 25000 தசம் ஏழு மூன்று மெட்ரிக் தொன் அளவிலான மியுரியேட் ஒப் பொடேஷ் உரத்தை அரசினால்; இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.

பிரதமர் ஊடக பிரிவ
2025.01.09

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]