2026 சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு சீனாவில் நடைபெறும் பிரதான தேயிலை தின கொண்டாட்ட நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சர் பங்கேற்பு

2026 சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு சீனாவில் நடைபெறும் பிரதான தேயிலை தின கொண்டாட்ட நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சர் பங்கேற்பு
  • :
2026 சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு சீனாவில் நடைபெறும் பிரதான தேயிலை தின கொண்டாட்ட நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சர் பங்கேற்பு

 சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று (21) சீனாவின் குவாங்ஷி (Guangxi) மாநிலத்தின் நன்னிங் நகரில் நடைபெற்ற சர்வதேச தேயிலை தின மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருந்தோட்ட , சமூக உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமந்தா வித்யாரத்ன உரை நிகழ்த்தினார்.

இதன்போது, 150 வருடங்களுக்கும் மேலாக சிலோன் தேயிலையானது (Ceylon Tea) இலங்கையின் நாமத்தை உலகெங்கும் கொண்டு சென்று, தரம், நம்பகத்தன்மை மற்றும் நன்மதிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
இன்று பல உலகளாவிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு மத்தியிலும், தேயிலை பயிரிடும் சமூகங்களின் நலன், ஒழுக்கநெறிகளுக்கு உட்பட்ட உற்பத்தி மற்றும் நிலையான தன்மையை உறுதிப்படுத்தி, உயர்தர தேயிலையை உற்பத்தி செய்வதற்கு இலங்கை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதையும் இங்கு அமைச்சர் வலியுறுத்தினார்.
 
இந்நிகழ்வில் சர்வதேச தேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள கம்போடியா, கென்யா, லாவோஸ், மலேசியா, மியன்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தேயிலை கைத்தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதிகளும், சீனாவின் குவாங்ஷி ஜுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்தின் உப ஆளுநர், குவாங்ஷி ஜுவாங் தன்னாட்சிப் பிராந்திய மக்கள் அரசாங்கத்தின் பிரதிப் பொதுச்செயலாளர் மற்றும் தன்னாட்சிப் பிராந்தியத்தின் விவசாய மற்றும் கிராமப்புற விவகார திணைக்களத்தின் கட்சித் தலைமைத்துவக் குழுவின் செயலாளர் உள்ளிட்ட பல தேயிலை துறை சார்ந்த தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Related Articles