இலங்கையில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதி பிரதமர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான ஷேய்க் அப்துல்லா பின் சயித் அல் நஹ்யான் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இடையேயான சந்திபோன்று இடம்பெற்றது.
இரு நாடுகளின் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்துதல் தொடர்பகா வினைத்திறனான இருதரப்புக் கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றதுடன், வர்த்தக முதலீடு, சுற்றுலா, எரிசக்தி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் வாய்ப்புக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அது தவிர ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை சம்மேளனம் மற்றும் இலங்கை தேசிய வர்த்தக சபையுடன் ஐக்கிய அரபு அமீரகம் - இலங்கை ஒருங்கிணைந்த வர்த்தக கௌன்சிலை உருவாக்குவது குறித்து முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.