கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கான நலன்புரி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேற்று மற்றும் இன்று (ஏப்ரல் 22 & 23) கண்டிக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய புனித தந்த இந்த சிறப்பு கண்காட்சி ஏப்ரல் 18 (2025) அன்று தொடங்கியது. இந்த மாதம் 27 ஆம் தேதி வரை பக்தர்கள் தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை புனித சின்னங்களைக் காணலாம். கண்காட்சிக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பௌத்த பக்தர்கள் கண்டிக்கு வருகை தந்தவண்ணம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகை தரும் பக்தர்களுக்கு உணவு, நீர், முதலுதவி மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முப்படைகளின் தலைமையில் 24 மணி நேர சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு செயலாளர், தனது விஜயத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நலன்புரி திட்டங்களின் தற்போதைய நிலையையை ஆய்வு செய்தார், மேலும் பொதுமக்களின் நலனுக்காக இரவு பகல் பாராமல் சேவையாற்றும் முப்படை, பொலிஸ், மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுக்கு மக்களுக்கு ஏட்படக்கூடிய சிரமங்களை தவிர்க்க சிறந்த சேவையை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
புனித கண்காட்சியில் கலந்து கொள்ளும் பௌத்த பக்தர்களின் அதிக வருகை காரணமாக, நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன அதனால் இங்கு வருகைதருவதற்கு முன்னர் சிரமங்களை தவிர்க்க வரிசைகளின் நிலைமைகளை அறிந்து வருகை தருமாறு பாதுகாப்பு செயலாளர் வேண்டிக் கொண்டார். கண்காட்சிக்காக நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு உதவி வழங்குவதில் உதவி வழங்கும் பரோபகாரர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு உலக பௌத்தர்களுக்கு இந்த அரிய ஆன்மீக நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நலன்புரி வசதிகளை வழங்குவதில் கூட்டுப் பொறுப்பையும் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்.
பாதுகாப்புச் செயலாளருடன் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் (மத்திய) தளபதி, 11 வது பிரிவின் கட்டளைத் தளபதி, மத்திய மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் , முப்படைகள் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.