ஐக்கிய நாடு சபை பிரதிநிதிகளுடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபட்டார்

ஐக்கிய நாடு சபை பிரதிநிதிகளுடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபட்டார்
  • :

நியூயோர்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), மற்றும் ஐ.நா.வில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கெளரவ ஜயந்த ஜயசூரிய, 2026 ஏப்ரல் 23 அன்று பல முக்கிய உயர்மட்ட பலதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

டொமினிக்கன் குடியரசின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி கெளரவ Wellington Bencosme உடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், ஹய்டியில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தல் குறித்து கலந்துரையாடினர். குறிப்பாக, படைகளின் நகர்வு, மருத்துவ உதவி, மற்றும் இலங்கை பணியாளர்களுக்கான நலன்புரி ஆதரவு உள்ளிட்ட வழங்கல் ஏற்பாடுகளை எளிதாக்குதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது இலங்கை பாதுகாப்புச் செயலாளர், பணிக்குழு தலைமையகத்தில் திறமையான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தையும், முக்கியப் பொறுப்புகளில் இலங்கை அதிகாரிகளை இணைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் கனடாவின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் நடைபெற்ற ஹய்டி பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உயர்மட்ட சந்திப்பிலும் இலங்கை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் ஹய்டியில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவின் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles