ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி Kunle Adeniyi க்கும் மகளிர் மற்றும் சிறுவர அலுவல்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி Kunle Adeniyi க்கும் மகளிர் மற்றும் சிறுவர அலுவல்கள் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு
  • :

ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியாக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் Kunle Adeniyi க்கும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா பால்ராஜுக்கும் இடையேயான சந்திப்பொன்று அண்மையில் அமைச்சில் நடைபெற்றது.

2022 முதல் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதியாக கடமையாற்றி, பெண்கள் அதிகாரமளித்தல், பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழித்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல தேசிய அளவிலான திட்டங்களுக்கு தனது அமைப்பின் ஆதரவை வழங்குவதன் மூலம், இலங்கை மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு தரமான சேவைகளை வழங்குவதில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்ட ஆதரவை அமைச்சர் பாராட்டினார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்துடன் மிகவும் சுமுகமான மற்றும் திறன் கொண்ட உறவை உருவாக்குவது சாத்தியமானது என்றும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் எதிர்கால இலக்குகளை அடைவதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்துடன் தொடர்ந்து ஒத்துழைக்க அழைப்பு விடுப்பதாகவும் Kunle Adeniyi இதன்போது தெரிவித்தார்.

Related Articles