போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான பாலஸ்தீன் தூதுவரர் இஹாப் கலீல் ஆகியோருக்கு இடையே நேற்று (28) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
பலஸ்தீனில் உள்ள காசா பகுதியில் தற்போதைய போர் நிலவரம் மற்றும் போரை நிறுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், இலங்கை எப்போதும் போருக்கு எதிராகவே நிற்கும் என்றும், அப்பாவி பலஸ்தீன் மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் வலியுறுத்தினார்.