அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல 1 வளாகத்தில் மே மதம் 9 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பல்துறை மருத்துவ முகாம் ஒன்று இடம்பெறவுள்ளதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனுதாபுரம், பொலன்னறுவை மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் ஓய்வுபெற்ற/ யுத்தத்தின்போது உயிரிழந்த போர் வீரர்களின் நெருங்கிய உறவினர்கள், ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற போர் வீரர்களுக்காக இந்த மருத்துவ முகாம் இலவசமாக நடாத்தப்படவுள்ளது.
இந்த மருத்துவ முகாமின் போது, போர் வீரர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், செயற்கை கால்கள் மற்றும் காலுறை ஜோடிகளும் வழங்கப்பட உள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை, 077-4837056, 077-4835056 மற்றும் 071-5362120 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.