அரசாங்கத்தின் தோட்டக் காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்கு வழங்கும் II ஆம் கட்டம் ஆரம்பம்!

  • :
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் அதன் இரண்டாம் கட்டம் (Stage 2) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், அமைச்சின் கீழ் உள்ள மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் (EPL) ஆகியவற்றுக்குச் சொந்தமான குறைந்த பயன்பாட்டில் உள்ள காணிகள் மற்றும் சொத்துக்களை உகந்த முறையில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு வாய்ப்புகளுக்காக தகைமையுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விருப்ப வெளிப்பாடுகள் (EOI) ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.

 இத்திட்டத்தின் கீழ் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை மற்றும் காலி போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள பெரிய தோட்டக் காணிகள், தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் பங்களாக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வழங்கப்பட்டுள்ள காணிப் பட்டியலின்படி, முதலீட்டுக் காணிகளின் அளவுகள் 5 வகைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன:
வகை 1 (100 ஹெக்டேயருக்கும் அதிக): விவசாய சுற்றுலாத்துறை (Agricultural Tourism) மற்றும் நறுமணப்பயிர்ச் செய்கைக்காக (அதிகபட்சம் 30 வருட குத்தகைக்காலம்) - ஹகல, மிட்லண்ட், ஓபல்கல, வுட்சைட் போன்ற பெரிய தோட்டக் காணிகள்.
வகை 2 (50 முதல் 100 ஹெக்டேயர் வரை): விவசாய சுற்றுலாத் திட்டங்களுக்காக (30 வருட குத்தகைக்காலம்) - கல்பியஹில்ல, கெல்லபொக்க, கொடகங்க, கோமர மற்றும் ஹரே பார்க் போன்ற தோட்டப் பிரிவுகள்.
வகை 3 (20 முதல் 50 ஹெக்டேயர் வரை): பெருந்தோட்டத் துறை, சூரியக்கல சக்தி (Solar) மற்றும் சுற்றுலாத் திட்டங்களுக்காக (20-30 வருட காலம்) - ரத்வத்த, விஹாரகல, ஹந்தானை போன்ற காணிகள்.
வகை 4 (20 ஹெக்டேயருக்கும் குறைவான): சுற்றுலா மற்றும் விவசாயத் திட்டங்களுக்குப் பொருத்தமான சிறிய காணிப் பிரிவுகள் - தெல்தொட்ட, கலபொட, ஹந்தானை, கந்தல்ஓயா, லெவலின், ரொக்வூட், ரஹதுங்கொட மற்றும் கொலப்பத்தவ போன்ற பிரதேசங்கள்.
வகை 5 (பங்களாக்கள் மற்றும் தொழிற்சாலைகள்): குறைந்த பயன்பாட்டில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் (கொடகங்க, ஹுன்னஸ்கிரிய, வுட்சைட், டன்கந்த, கந்தல்ஓயா, கலபொட, ரொக்வூட் போன்ற) மற்றும் பங்களாக்கள்/அதிகாரபூர்வ இல்லங்களை சுற்றுலாத்துறை அல்லது உற்பத்தி நடவடிக்கைகளுக்காக புனரமைத்து நடத்துவதற்கு (20-30 வருட காலப்பகுதிக்கு).
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்:
இலங்கைப் பிரஜைகளான தனிநபர்கள் அல்லது இலங்கையில் நடைமுறையிலுள்ள எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட எந்தவொரு சட்டபூர்வமான நபர்/நிறுவனம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தேதி: 2026 ஜூன் மாதம் 30 ஆம் திகதி மு.ப. 11.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அல்லது நேரில் வந்து ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர், உயர்மட்டப் கொள்முதல் குழு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, 8 வது மாடி, முனையம் A, செத்சிறிபாய II ஆம் கட்டம், பத்தரமுல்ல.
மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு:
இணையதளம்: www.plantation.gov.lk (காணிப் பட்டியல், தகைமைகள் மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்களை பதிவிறக்கம் செய்யலாம்)
தொலைபேசி எண்: 0112186223
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
தொடர்புடைய காணிகள்/சொத்துக்களை பார்வையிடுவதற்கு முன்அனுமதி அவசியமாவதுடன், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி வளாகத்தினுள் நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது. தாமதித்து கிடைக்கும் விண்ணப்பங்கள் அமைச்சின் உயர்மட்டக் கொள்முதல் குழுவினால் நிராகரிக்கப்படும்

Related Articles