பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 26வது ASEAN பிராந்தியத்தின் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் (ARF-HDUCIM) உரையாற்றுகையில், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்பவும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும் பாதுகாப்பு கல்வியின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.
கொழும்பில் உள்ள Galle Face ஹோட்டலில் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் (KDU) நடத்தப்பட்ட மேட்படி கூட்டத்தின் தொடக்க விழாவின் சிறப்புரையின் போது பிரதி அமைச்சர், பிராந்தியத்தில் பாதுகாப்புத் துறையிலுள்ள சில முக்கிய அம்சங்களை கோடிட்டுக்காட்டி வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் மூலோபாய கண்டுபிடிப்புகளின் அவசியத்தை வலியுருத்தி உரையாற்றினார்.
தொழில்நுட்பம், புவிசார் அரசியல் மாற்றங்கள்l மற்றும் மற்றம்பெரும் பாதுகாப்பு சூழல்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பாதுகாப்பு கற்கைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். பொதுவான பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுக்க பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையம் இங்கு வலியுறுத்தினார்.
இந்நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) சமூகமளித்தார். நிகழ்விற்கு வருகை தந்த சிறப்பு அதிதிகளை KDU துணைவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார வரவேற்றார்.
தனது உரையின் போது மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) பாதுகாப்புத் துறையில் , குறிப்பாக இராணுவ மற்றும் சிவில் பயன்பாடுகளைக் கொண்ட இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களில் புத்தாக்கங்களை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். தீவிர காலநிலை மாற்றங்கள், நீர் பற்றாக்குறை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்றவை பிராந்திய பதட்ட நிலைமைகளை அதிகரித்து மோதகலுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இந்நிகழ்வைப் போன்ற பயனுள்ள உலகளாவிய கலந்துரையாடல்களில் பங்களிப்பு செய்ய இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"மாற்றத்தின் சகாப்தத்தில் பாதுகாப்பு கல்வி" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, 26வது ஆசிய பிராந்திய பிராந்தியத்தின் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் (ARF-HDUCIM) கொழும்பில் ஆரம்பமாகியது. ஜனவரி 22 முதல் 25 வரை நடைபெறும் இந்த நிகழ்வு, பிராந்தியத்திலுள்ள பாதுகாப்பு கல்வி நிறுவனங்களின் முக்கிய பங்குதாரர்களிளை ஒன்றிணைத்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட கலம் அமைத்துக் கொடுக்கிறது.
இந்த ஆண்டு KDU மற்றும் கம்போடிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (கம்போடியா) இணைந்து நடத்தும் ARF-HDUCIM, பாதுகாப்பு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், லாவோஸ், தாய்லாந்து, மியான்மர், வியட்நாம், கம்போடியா, திமோர் லெஸ்டே, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச பிரதிநிதிகள் இதில் கலந்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கேற்பாளர்களில் இராணுவ மற்றும் கல்வியியலாளர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அடங்குவர்.
தொடக்க அமர்வில் KDU வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு), இராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், இராஜதந்திரிகள், தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் உட்பட சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.