மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வீடு வழங்கல்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வீடு வழங்கல்
  • :

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 22ம் திகதி அன்று பண்டாரகம, வல்கமாவில் செல்வி எம். நிலுஷா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அதிகாரப்பூர்வமாக கையளிப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த திட்டம், இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் விடாமுயற்சியுடன் கூடிய தலைமையின் கீழ் நிறைவடைந்தது.

14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 612 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் மேற்பார்வையுடன், இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் 1 வது படையலகு இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, சமுர்த்தி திணைக்களம், பண்டாரகம பிரதேச செயலகம் மற்றும் 1 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி மற்றும் உள்நாட்டு நன்கொடையாளர்கள் ஆகியோரின் நிதி மற்றும் பொருள் பங்களிப்புகளால் வீடு வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது.

விழாவின் போது, பிரதம விருந்தினர் பயனாளியிடம் சாவியை ஒப்படைத்துடன் மேலும் செல்வி எம். நிலுஷா குமாரிக்கு வளமான எதிர்காலத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தை நனவாக்குவதில் கட்டுமானக் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பையும் அவர் பாராட்டினார்.

இந்த விழாவில் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ , பண்டாரகம பிரதேச செயலாளர் (உதவி அரசாங்க அதிபர்) , 1 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் கிராமவாசிகளும் கலந்துக் கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]