அஸி திஸி பியவர” அநுராதபுர மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு

அஸி திஸி பியவர” அநுராதபுர மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு
  • :
 
"அஸி திஸி பியவர” அநுராதபுர மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு நேற்று (09) அநுராதபுர மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 ஊடகவியலாளர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் தொழில் தகைமைகளை முன்னேற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும்.

பிரதேச ஊடகவியலாளர்களுக்குக் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தொழில் நிபுணத்துவத்திற்காக அவசியமான பல்வேறு துறைகள் தொடர்பாக இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேராவினால் விசேட விரிவுரை வழங்கப்பட்டதுடன், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிகள் மற்றும் ஊடக தொழிற்பாடு தொடர்பான விடயங்களை அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெளிவு படுத்தினார்.
 
அநுராதபுர ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் மிகவும் பெறுமதியான பணியை மேற்கொள்வதாக அநுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்தார்.
 
இக்கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் தமது பிரச்சினைகள் மற்றும் கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன், அவர்களில் அதிகமானவர்கள் "தமது தொழில் தகைமைகளை அதிகரிப்பதற்கு அவசியமான வழிகாட்டல்களை , எதிர்காலத்தில் வழங்குமாறு" கோரிக்கை விடுத்தனர்.
 
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பட்டய ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபித்தல் தொடர்பாக அதிக எதிர்பார்ப்பு காணப்படுவதாகவும், ஊடகவியலாளர்கள் இதன் போது சுட்டிக்காட்டினர்.
மேலதிக மாவட்ட செயலாளர் சந்தன அபேசேகர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எல். பி. திலகரத்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles