வெலிகம நகர சபை தலைவர் முஹம்மது அஃப்ராஸின் தலையீட்டினால் சேனாநாயக்க விளையாட்டு மைதானத்தின் விளையாட்டரங்கை நிருமாணிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இதனால் விளையாட்டரங்கின் வசதிகளை மிகவும் உயர்மட்டத்திற்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான உத்தேச மொத்தச் செலவு 72 இலட்சம் ரூபாய்களாகும்.
நிருமாணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதுடன், 2025 டிசம்பர் 31ஆம் திகதியளவில் முழுமையாக பூரணப்படுத்துவதற்குத்அஂ தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டரங்கின் கட்டிட வேலைகள் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இடைக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களினால் நிருமாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


