அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்ற எம்பிலிப்பிட்டிய வர்த்தக நிலையத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்!
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரைச் சுரண்டி நியாயமற்ற முறையில் லாபம் ஈட்ட முயன்ற குறித்த வர்த்தக நிலையம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு 2026 ஏப்ரல் 27 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த வர்த்தக நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் (ரூ. 500,000) அபராதம் செலுத்துமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


