கொழும்பில் உள்ள பொதுநலவாய போர் மயானத்தில் கடந்த சனிக்கிழமை (25 ஏப்ரல்) நடைபெற்ற வருடாந்த நினைவு விழாவின்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), ANZAC தின அதிகால அஞ்சலியில் கலந்துகொண்டு, ANZAC நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.
வருடாந்தம் ஏப்ரல் 25 அன்று அனுசரிக்கப்படும் ANZAC தினம், முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படைகளின் பங்களிப்பை நினைவுகூர அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு விழாவின் ஒரு முக்கிய அம்சமான அதிகாலை நிகழ்வின் போது , கெலிபொல்லியில் முதலில் தரையிறங்கிய நேரத்தை அடையாளப்படுத்துவதோடு, போரில் பணியாற்றித் தியாகம் செய்த அனைவருக்கும் ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலியாகவும் அமைகிறது.
அதிகாலை வேளையில் அனுசரிக்கப்பட்ட இந்த விடியற்காலை அஞ்சலியானது, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் மரணம் அடைந்த இராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் ஒரு புனிதமான நினைவுத் தருணத்தைக் குறிக்கும். இந்த விழாவில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கௌரவ மேத்யூ டக்வொர்த் , நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் பைன் மற்றும் இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் கௌரவ செமிஹ் லுட்ஃபு துர்குட் அவர்களும் சமூகமளித்தனர். இதன் போது மரணம் அடைந்தவர்களுக்கு மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
இலங்கை இராணுவத் தளபதி, இலங்கை கடற்படை பிரதம அதிகாரி, மற்றும் இலங்கை விமானப்படையின் பயிற்சி இயக்குனர் உள்ளிட்ட இலங்கை ஆயுதப் படைகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சமயத் தலைவர்கள், கொழும்பு மாநகர சபையின் மேயர், தூதரக அதிகாரிகள் , முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களின் இந் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.


