அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சொகுசு வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கு இருக்கை பட்டிகளை அணிவது நேற்று (01) முதல் கட்டாயம் 

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சொகுசு வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கு இருக்கை பட்டிகளை அணிவது நேற்று (01) முதல் கட்டாயம் 
  • :

-   வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன

பாதுகாப்பு இருக்கை பட்டி அணிவதனால் பாதுகாப்பான போக்குவரத்துக்கு பயணிகள் மற்றும் சொத்துப் பாதுகாப்பிற்கும் பாரிய ஆதரவு கிடைக்கும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல சொகுசு வாகனங்களின் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகளும் இருக்கைப் பட்டிகளை அணிவது கட்டாயம் என ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக சாரதிகள் மற்றும் பயணிகளைத் தெளிவுபடுத்துவதற்காக கொட்டாவை நெடுஞ்சாலை நுழைவாயிலில் துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட தலைவர் இதனை குறிப்பிட்டார்.

ஊடகப்பிரிவு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

Related Articles