நாசகார வேளைகளினால் சீனிக் கைத்தொழிலை வீழ்வதற்கு இடமளிப்பதில்லை -  மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்த்தன

நாசகார வேளைகளினால் சீனிக் கைத்தொழிலை வீழ்வதற்கு இடமளிப்பதில்லை -  மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்த்தன
  • :

செவனகல சீனித் தொழிற்சாலையில் மறைக்கப்பட்டு காணப்பட்ட  சுமார் 170kg கண்டறியப்பட்ட ஒரு தொகை கரும்பு மற்றும் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், வர்த்தக வாணிபத்துறை உணவு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்த்தன நேற்று  (01) செவனகல சீனி தொழிற்சாலைக்கு விஜயம் செய்ததுடன்,  அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அங்கிருந்த தரப்பினருடன் கலந்துரையாடினார். 

 

இதன்போது நாசகார வேலைகளினால் சீனி கைத்தொழில் வீழ்ச்சி அடைவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிப்பதில்லை என்றும், வெளிப்படையாக செயற்படும் ஊழியர்கள், விவசாயிகளை பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

 

இதன்போது பிரதான செயற்பாடாக சீனியின் விலையை நிலையாக பேணுவதே தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

கரும்பு ஒரு தொகையுடன் காணப்பட்டு கண்டறியப்பட்ட கல் தொடர்பாக செவனகல தொழிற்சாலையின் அதிகாரிகள் மேற்கொண்ட முறைப்பாட்டில் ஆரம்ப விசாரணை நடவடிக்கைகள், பொலிஸ் அதிகாரிகளின் தலையிட்டுடன் மேற்கொள்ளப்படுகின்றது

 

Related Articles