வர்த்தக, வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட பலர் அண்மையில் பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தில் கண்காணிப்பு விஜயம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் சுமார் 80 நாடுகளின் 600 க்கும அதிகமான நபர்களின் பங்குபற்றலுடன், உள்நாட்டு பிரதிநிதிகள் சுமார் 125 பிரதிநிதிகளின் பங்களிப்புடன் 10 நாட்கள் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ள 3வது உணவு இறையாண்மை மாநாடு "NYELENI" உலக மாநாடு இந்நிறுவனத்தில் நடாத்துவதற்குத் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைவிடப்படுவதற்கும் விற்பனை செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போதைய வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவின் சரியான வழிகாட்டுதலின் கீழ், நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து எதிர்காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக வளர்ச்சியடைவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


