ஊடக வெளியீடுகளினால் அழுத்தத்திற்கு உள்ளான பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்

ஊடக வெளியீடுகளினால் அழுத்தத்திற்கு உள்ளான பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்
  • :

- சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

தற்காலத்தில் எமது கவனம் ஊடக வெளியீடுகளினால் அழுத்தத்திற்கு உள்ளான பிரஜைகளின் உரிமைகளை பாதுகாத்துக் கொடுக்கும் நோக்கில் செயற்பட வேண்டும் என்பதுடன், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய புதிய ஊடகங்களினால் குரல் அற்றுப்போன பிரஜைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவதற்கு புதிய சட்டத்தை தொகுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகை பேரவையினால் நடத்தப்பட்ட ஊடக கல்வி மற்றும் இதழியல் தொடர்பான டிப்ளமோ பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த டிப்ளமோ தாரிகளுக்காக சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு இன்று (02) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Related Articles