அத்தனகலு ஓயா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
அந்த மழை நிலைமையும், நீர்ப்பாசனத் திணைக்களம் அத்தனகலு ஓயா நீர்ப்பிடிப்பு பகுதியில் பராமரித்து வரும் நீர்மட்ட அளவையிடும் நிலையங்களின் தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையிலும், இப்போதிலிருந்து அடுத்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மகர, கம்பஹா, மினுவங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் சில இடங்களில் சிறியளவிலான வெள்ள நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும், இந்த தாழ்நிலப் பகுதிகள் வழியாகச் செல்லும் சில சாலைகள் சில இடங்களில் நீரில் மூழ்கும் அபாயமும் காணப்படுகிறது.
எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையை முன்னிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளிடமும் கோரப்படுகிறது


