இலங்கை கடற்படையினரால் நீர்கொழும்பு கெபும்கொட பகுதி கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்து அறுநூற்று எழுபது (1670) கிலோ (500) கிராம் பீடி இலைகள் கொண்ட டிங்கி படகு (01) ஒன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மட்டுபடுத்துவதற்காக, கடற்படையினர் இலங்கயை சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான விரைவு தாக்குதல் படகு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் கெளனி நிறுவனத்தால் 2025 பெப்ரவரி 1 ஆம் திகதி நீர்கொழும்பு, கெபும்கொட கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் கைவிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை 2025 பெப்ரவரி 01 சோதனை செய்தனர். அங்கு, ஐம்பத்து மூன்று (53) பைகளில் பொதிச்செய்யப்பட்ட ஆயிரத்து அறுநூற்று எழுபது (1670) கிலோ ஐந்நூறு (500) கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையினால், அவற்றை நிலத்திற்கு கொண்டு வரமுடியாமல் கடலில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதுடன், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.