கடந்த சில வாரங்களாக கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் நாட்டில் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது.
முறையான பரிசோதனைக்காக வேண்டி, சுமார் 300 கொள்கலன்களை துறைமுகத்தில் குறைந்தது 3 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டியிருந்ததால், நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்தது.
இது தொடர்பாக நேரடியாகத் தலையிட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழுவின் முடிவின் அடிப்படையில், துறைமுக எல்லைக்கு அப்பால் உள்ள ப்ளூமெண்டல் வளாகத்தின் 5 ஏக்கர் நிலப்பரப்பில், 2.5 ஏக்கர் நிலத்தை முறையாகத் தயாரித்து, ஜனவரி மாத இறுதியில் குறுகிய கால தீர்வாக சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைப்பது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
மிகக் குறுகிய காலத்தில் விரைவாக தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்ட புளூமெண்டல் வளாகத்தின் 2.5 ஏக்கர் நிலப்பகுதி இன்று (03) முதல் தற்காலிகமாக கொள்கலன்களை வைப்பதற்காக திறந்து வைக்கப்பட்டது.