சிநேகபூர்வ அடிப்படையில் வெளிநாட்டு சேவையில் நியமனங்கள் மேற்கொள்ளப்டுவதில்லை - அமைச்சரவை பேச்சாளர் 

சிநேகபூர்வ அடிப்படையில் வெளிநாட்டு சேவையில் நியமனங்கள் மேற்கொள்ளப்டுவதில்லை - அமைச்சரவை பேச்சாளர் 
  • :
வெளிநாட்டு சேவைக்கு நியமனங்களை மேற்கொள்ளும் போது, சி்நேகபூர்வத்தின்  அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்வதில்லை என அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அரசாங்க சேவையில் வெளிவாரியாக இடம்பெறும் நியமனங்களின் போது, அந்த அந்த நபர்களிடம் காணப்படும் திறமை மற்றும் இயலுமையைக் கண்டறிந்து அதன்படி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்; 
"முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தகைமைகள்  நீதியரசராவது அல்ல. அவருக்கு நாட்டைப் பிரதி நிதித்துவப்படுத்துவதற்கான திறமை காணப்படுகிறது .  அது தான் தகைமை. மகிந்த ரத்னாயக்க என்பவர் ஊடகத் துறையில் மற்றும் சமூகத்தில் சிறந்த செயற்பாட்டாளர் மற்றும் திறமையாளர். அவர்கள் இருவரும் மாத்திரமல்ல. அரச இராஜதந்திர சேவைகளுக்கு அப்பால் பல்கலைக்கழக கலாநிதி, பேராசிரியர்கள், முப்படை சேவையில் உள்ள திறமையான உத்தியோகத்தர்கள் இந்த இடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள்.
தான் மேற்கொள்ளும் தொழிலில் வெளிப்படுத்தும் திறமைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இயலுமை காணப்படுகிறது. அது அதன்படி அன்றி எவ்வித த்திலும் அரசியல் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. 
கடந்த காலங்களில் வெளிநாட்டு சேவைக்கு மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புகள் கூட நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் இந்த நியமனங்களை மேற்கொள்வதற்கு நீ பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.  அதனைக் கருத்திற் கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. எமது உறவினர், மகள், மகன், மாமா, மருமகள் போன்றவர்களை நியமித்துள்ளதுள்ளோமா  என முடிந்தால் காட்டுங்கள். இந்த அனைவரும் நீங்கள்  அறிந்தவாறு அரசாங்க சேவையில் இருந்தவர்கள் தான். என்றும் அமைச்சர் மேலும் தெளிவு படுத்தினார்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]