சிங்கப்பூரின் பாரிய சுகாதார நடவடிக்கைளில் ஈடுபடும் சுகாதாரப் பராமரிப்புக் குழுவும், அரசு மருத்துவமனைகள், தேசிய சிறப்பு மையங்கள் மற்றும் மருந்தகங்களின் வலையமைப்புமான சிங்ஹெல்த் டியூக்-என்யூஎஸ் Singhealth Duke-NUS குளோபல் ஹெல்த்கேர் குழுமத்தின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுக்கும் இடையிலான சந்திப்பு சமீபத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.
உலகளாவிய சுகாதார ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், மற்றும் நாட்டின் சுகாதாரப் பணியாளர்களின் மருத்துவத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்காக புதிய வழிகளை ஆராய்வதற்காக நிறுவப்பட்ட யாழ்ப்பாண பிராந்திய ஒத்துழைப்பு மையத்தின் Regional Collaborating Centre (RCC) தற்போதைய செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
சிங்ஹெல்த் டியூக்-என்யூஎஸ் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டின் துணை இயக்குநரும், சர்வதேச ஒத்துழைப்பு அலுவலகத்தின் மூத்த இயக்குநருமான (திட்ட மேம்பாடு) திருமதி விஜய ராவ், சின்ஹெல்த் மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு இடையிலான நீண்டகால உறவைப் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார். இலங்கை சுகாதார நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் ஆராய்ச்சி முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் சின்ஹெல்த்தின் நெருங்கிய உறவையும் அவர் எடுத்துரைத்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி, கல்வி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த சின்ஹெல்த் எதிர்நோக்குவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
நாட்டின் தற்போதைய சுகாதார சேவைகள் குறித்து விளக்கமளித்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, கூட்டு ஆராய்ச்சி, கல்வி முயற்சிகள் மற்றும் சுகாதார சேவை மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களில் ஒத்துழைக்க சின்ஹெல்த் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் விருப்பம் தெரிவித்ததற்கும், உலகளாவிய சுகாதாரத்தில் சுகாதார சமத்துவத்தை வளர்ப்பதன் மூலமும், வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும், சுகாதார அச்சுறுத்தல்களிலிருந்து சமூகங்களைப் பாதுகாப்பதன் மூலம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அதன் சேவைகளை வழங்குவதற்கும் நன்றி தெரிவித்தார்.
பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் சுகாதாரத் துறையில் இலங்கையின் திறன் மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் உதவி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பிராந்திய ஒத்துழைப்பு மையம் (RCC), சிங்ஹெல்த் டியூக்-NUS குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது ஆய்வகங்கள், அறுவை சிகிச்சை அரங்குகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் ஒரு அருங்காட்சியகம் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ளது.
சிங்ஹெல்த் டியூக்-NUS கல்வி மருத்துவ மையம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் ஆகியவை ஏற்கனவே புற்றுநோய் ஆராய்ச்சி, நரம்பியல் மற்றும் எலும்பியல் துறைகளில் புதுமையான திட்டங்களில் ஒத்துழைத்து வருகின்றன.


