ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கிளிநொச்சியில்

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கிளிநொச்சியில்
  • :

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச மண்டபத்தில் நடைபெற்றது.

 

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இவ் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு மொத்தமாக 287 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாகாண ரீதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வடமாகாணத்திற்கான முதல் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க,வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சிறீபவானந்தராஜா, ம.ஜெகதீஸ்வரன், ஜனாதிபதியின் செயலாளர் யேனெமைய ளுயயெவா முரஅயயெலயமந, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே,வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர். மாவட்ட அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சனாதிபதி செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles