இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை ஊடாக சிறைக்கைதிகளுக்காக நடாத்தப்படும் தொழில் பயிற்சிப் பாடநெறிகளை புதுப்பித்தல் மற்றும் மிகவும் வினைத்திறனாக நடாத்துவதற்காக புதிய பாடநெறிகளை ஆரம்பித்தல் தொடர்பாக தொழில் பயிற்சி அதிகாரசபை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி/ உதவி பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடநெறிகளின் போதனாசிரியர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரியந்த வீரசிங்க தலைமையில் அண்மையில் (25) ஒருகொடவத்தை K - TEC நிறுவனத்தில் நடைபெற்றது.
இதன்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் (சீர்திருத்தம்) உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


